இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 மார்ச் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

          

மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் நற்பெயர் கிட்டும்.

கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று தொடர்ந்து அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிள்ளை களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதர - சகோதரிகளின் ஆதரவு உண்டு. அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்: புதிய மின்சாதனங்கள், கலை பொருட்கள் வாங்குவீர்கள். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மனக்குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர் அறிவுரை தருவார்.

தனுசு: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கும்பம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கியை வசூலிக்க போராடுவீர்கள்.

மீனம்: பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவும். உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பயம் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

SCROLL FOR NEXT