மேஷம்: நினைத்த காரியம் அடுத்தடுத்து நிறைவேறும். மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கி தெளிவாக முடிவெடுப்பீர்கள். கல்வியாளர், அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். வெளியூர் பயணம் திருப்தி தரும்.
ரிஷபம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.
மிதுனம்: எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் கரையக்கூடும். கணவன் - மனைவி இடையேயான பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். ஆன்மிகம், யோகாவில் மனதை செலுத்துங்கள். சகோதரரால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும்.
கடகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பழைய கடனையை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும்.
சிம்மம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரரால் நன்மை உண்டு. உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
கன்னி: தொட்ட காரியங்கள் துலங்கும். மனதில் புது தெம்பு பிறக்கும். அனுபவப்பூர்வமாகப் பேசுவீர்கள். பழைய கடனைப் பைசல் செய்ய புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: நீண்டநாட்களாக விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் வீடுதேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல் படுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். திடீர் பயணம் ஏற்படும்.
விருச்சிகம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாசனை திரவியங்கள், கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் நட்பும், உதவியும் கிடைக்கும்.
தனுசு: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். குலதெய்வப் பிரார்த்தனை களை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: மனப்போராட்டம், ஒருவித குழப்பம் ஏற்படும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. கணவன் -மனைவிக்குள் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வரக் கூடும். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.
கும்பம்: வியாபாரரீதியாக சிலரைச் சந்திப்பீர்கள். கடந்தகால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.
மீனம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.