இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 நவம்பர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: அடுக்​கடுக்​காக இருந்த செல​வு​கள் இனி குறையும். சவாலான காரியங்​களை​யும் எடுத்து முடிப்​பீர். முன்​கோபம் நீங்​கும். வியாபாரரீதி​யாக பிரபலங்​களின் உதவியை நாடுவீர். பங்​குதா​ரர்​கள் ஆதரிப்​பர். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர்.

ரிஷபம்: ராசிக்​குள் சந்​திரன் தொடர்​வ​தால் கையிருப்பு கரையக்​கூடும். வீண் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது. பிள்​ளைகளின் உடல்​நிலை லேசாக பாதிக்​கும். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்​து​வீர். வியாபாரத்​தில் போட்டி அதி​கரிக்​கும். அலு​வல​கத்​தில் கவனம் தேவை.

மிதுனம்: எதி​ரி​களை வீழ்த்​தும் வல்​லமை உண்​டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்​பீர். சேமிக்​கும் அளவுக்கு வரு​வாய் அதி​கரிக்​கும். பழுதான சாதனங்​களை மாற்றி விட்டு புதிது வாங்​கு​வீர்​கள். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

கடகம்: வெளிவட்​டாரத்​தில் மதிப்பு கூடும். பழைய நினைவு​களில் மூழ்​கு​வீர். சிலர் நன்றி மறந்து பேசுவர். யாருக்​கும் எந்த வகை​யிலும் உறுதி​மொழி தரு​வதை தவிர்க்​கவும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி நேசக்​கரம் நீட்​டுவார்.

சிம்மம்: பிள்​ளைகள் பொறுப்​பாக நடந்து கொள்​வர். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் மகிழ்ச்சி பொங்​கும். ஆன்​மிகத்​தில் நாட்​டம் அதி​கரிக்​கும். வியாபாரத்​தில் பாக்​கி​களை போராடி வசூலிப்​பீர்​கள். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​கவும்.

கன்னி: சொந்த பந்​தங்​களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்​தைவழி சொத்​துகள் கைக்கு வரக்​கூடும். சகோ​தர சகோ​தரி​கள் பண உதவி செய்​வார்​கள். வாக​னப் பழுது நீங்​கும். வியாபார நெளிவு சுளிவு​களைக் கற்​பீர். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​கவும்.

துலாம்: பிள்​ளைகளால் கையிருப்பு கரைய வாய்ப்பு உண்டு. வீண் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது. சந்திராஷ்டமம் தொடர்​வ​தால் வெளிவட்​டாரம், வியாபாரத்​தில் கவனம் தேவை. அலு​வல​கத்​தில் ஒரு வேலையை முடிக்க படாத​பாடு பட வேண்​டி​யிருக்​கும்.

விருச்சிகம்: அரசு காரியங்​களில் வெற்​றியுண்டு. பண வரவு திருப்​தி​கர​மாக இருக்​கும். பூர்​வீக வீடு, மனை, விவசாய நிலங்​களை விற்க முயற்​சிப்​பீர்​கள். சோர்வு நீங்கி மகிழ்ச்​சி​யுடன் காணப்​படுவீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார். வியாபாரம் சூடு பிடிக்​கும்.

தனுசு: புதி​ய​வர்​கள் அறி​முக​மாவர். வர வேண்​டிய பணம் கைக்கு வரும். வருங்​காலத்​துக்​காக சேமிக்​கத் தொடங்​கு​வீர்​கள். வழக்​கு​கள் சாதக​மாக முடியும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்​து​வீர்​கள். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும்.

மகரம்: குடும்​பத்​தில் உங்​கள் வார்த்​தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்​கள், வெற்றி பெற்​றவர்​களின் நட்பு கிடைக்​கும். எதிர்​பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்​பீர்​கள். அலு​வல​கத்​தில் மகிழ்ச்​சி​யுண்டு. வியாபார ரீதி​யாக பிரபலங்​களை சந்​திக்​கும் வாய்ப்பு கிட்​டும்.

கும்பம்: எதிர்​பார்த்​துக் கொண்​டிருந்த பணம் வரும். வீட்​டில் பழுதான பொருட்​களை மாற்​றி​விட்டு புதிய பொருட்​களால் அலங்​கரிப்​பீர்​கள். வியாபாரம் சூடு பிடிக்​கும். அலு​வல​கத்​தில் உங்​களின் தரம் ஒருபடி உயரும். புதிய பத​விக்கு பரிந்​துரைக்​கப்​படுவீர்.

மீனம்: தாய்​வழி உறவினர்​களால் ஆதாயம் உண்டு. சிக்​க​னமாக செல​வழித்து சேமிக்​கத் தொடங்​கு​வீர். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். பங்​குதா​ரர்​கள், பணி​யாட்​களின் ஆதரவு உண்டு. ஓரளவு லாபம் கிட்டும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT