மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர் ஆதரவு தருவார்.
ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர். அலுவலகத்தில் தான் உண்டுதன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சோம்பல் விலகும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் காரியத் தடைகள் வரலாம். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
துலாம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். பணவரவு திருப்தி தரும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. திட்டமிட்ட வேலையை முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர். உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரத்தில் நிம்மதியுண்டு. பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும்.
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். அலுவலகத்தில் யாரையும் குறை சொல்ல வேண்டாம். பொறுப்புகள் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
மீனம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.