மேஷம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்யார் என்பதை கண்டறிவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதி உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
மிதுனம்: குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கடகம்: சகோதர வகையில் செலவு, அலைச்சல் வரும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் ஆகியவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும்.
துலாம்: திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களால் பயனடைந்த சிலர் இப்போது உங்களுக்கு உதவி செய்வர். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
விருச்சிகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். மனைவி, பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
தனுசு: மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு வரக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவி புரிவர். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
மகரம்: சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். வீண் விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். மூத்த சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொண்டு செயல்படுவர். அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.
கும்பம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிம்மதி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்.
மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். பயணம் செல்வீர்.