மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.
மிதுனம்: நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலகியிருந்த பழைய சொந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் சுறுசுறுப்பைப் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி ஏற்படும். புது இடத்துக்கு கடையை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு உண்டு.
சிம்மம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.
கன்னி: பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாய முண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பார்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்துடன் சுற்றுலாப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
துலாம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை உண்டு.
விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
தனுசு: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகி்ழவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
மகரம்: மாறுபட்ட அணுகுமுறையால் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சகோதரி உங்கள் உதவியை நாடுவார். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். பொதுக் காரியங்களில் முன்னின்று செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
மீனம்: சவாலான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.நீண்டகாலக் கடன்களை பைசல் செய்வதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.