இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 மே 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவரின் அறிமுகம் கிட்டும். தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

ரிஷபம்: புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். நினைத்த காரியம் நிறைவேறும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மிதுனம்: காரியத் தடை, அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரால் கையிருப்புகள் கரையலாம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பது நல்லது. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: இல்லத்தின் அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். வியாபார ரீதியாக பயணம் செல்வீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கை கூடி வரும். பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர். அலுவலகத்தில் தான் உண்டுதன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் லாபம் தரும்.

கன்னி: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவர்.

துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர். வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரம் லாபம் தரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்புகளை அறிந்து செயல் படுவர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலக மேலதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்.

மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும்.

கும்பம்: சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பார்கள். பழைய நல்ல நினைவுகளை நினைத்து மகிழ்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். கூடுதல் பொறுப்புகளும் சேரும்.

மீனம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குழப்பம், மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

SCROLL FOR NEXT