மேஷம்: தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்தோர் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரரின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
மிதுனம்: மகளின் திருமணம், மகனின் வேலை என்று அலைச்சல், டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் புது முடிவுகளை தாமதப்படுத்தவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
கடகம்: விலையுயர்ந்த கலைப் பொருட்கள் வாங்குவீர். மனைவிக்கு புது ஆடை, ஆபரணங்களை வாங்கி கொடுப்பீர். வாகனப் பழுது விலகும். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்துமோதல் விலகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். உங்களைப் பற்றி உறவினர், நண்பர்கள் பெருமையாக பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
துலாம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். மனஸ்தாபம் நீங்கி குடும்பத்தில் நிம்மதியுண்டு. புது வாகனம் வாங்குவீர். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். தம்பதிக்குள் மனக்கசப்பு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவு இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உறவினர், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரம் சூடு பிடிக்கும். கடையில் சில மாற்றங்களை செய்வீர். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்.
மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபம் தருவதாக அமையும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். தந்தைவழியில் நிம்மதியுண்டு. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கும்பம்: பாதியில் நின்ற பணிகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர். வியாபாரம் சிறக்கும்.
மீனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்கள். மனைவியின் சகோதரர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.