இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 டிசம்பர் 2025

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம், அனுகூலம் கிடைக்கும். தொண்டைப் புகைச்சல், வயிற்று வலி வந்து குணமாகும். பல வகையிலும் பண வரவு, பொருள் வரவு உண்டு.

மிதுனம்: புதிய நபர்கள், வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தேவையற்ற அச்சம், கவலை,

குழப்பங்கள் நீங்கி, தெளிவும், நம்பிக்கையும் பிறக்கும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பேச்சில் கவனம் தேவை.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். தக்க சமயத்தில் உதவுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

சிம்மம்: எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, மனதில் நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புதியவர்களின் நட்பால் ஆதாயம் கிடைக்கும். தலைவலி, காய்ச்சல் நீங்கும்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளால் திடீர் பயணம், அலைச்சல் உண்டு. சளித் தொந்தரவு வந்து நீங்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்து கொண்டு, விரும்பி வருவார்கள். குடும்பத்தினரால் தேவையற்ற செலவுகள், வெளியூர் பயணம், அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

விருச்சிகம்: தேவையற்ற மனக் குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவு பல வகையிலும் உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

தனுசு: இடையூறுகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பல வகையிலும் சேமிப்பு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். வீடு, வாகனப் பழுதை சரிசெய்வீர்கள்.

மகரம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்று யோசிப்பீர்கள். நகைகள், பணம், முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வாகன வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த கலைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்: மனதில் நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி, வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.

SCROLL FOR NEXT