மேஷம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பணப் பற்றாக்குறை விலகும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. தாயார் ஆதரவாக இருப்பார்.
ரிஷபம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். மகளின் கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
மிதுனம்: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.
கடகம்: சுபச் செலவுகள் அடுத்தடுத்து வரும். வீட்டுக்குத் தேவையான நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.
சிம்மம்: எதிர்பாராத செலவுகளால் கடன்வாங்கும் சூழல் ஏற்படும், மன உளைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவு வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.
கன்னி: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்தி வரும். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளை களின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து பணம் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர்கள். மனைவிவழி உறவினரால் சில காரியங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகளால் சந்தோஷமடைவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
மகரம்: பால்ய நண்பர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வேலை தேடுவோருக்கு சாதகமான தகவல் வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த கடன்கள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
மீனம்: அலைச்சல், டென்ஷன் ஏற்படும். வீண் விவாதங்களில் தலையிடாதீர்கள். பிள்ளைகளால் நிம்மதி கிட்டும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். யாருக்கும் எந்தவித உத்தரவாதமும் தரவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.