நெல்லையப்பர் கோயில் இசைத் தூண்கள். | உள்படம்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

 
கலை

அழியாத மரபாக ஒலிக்கும் தமிழ் இசை!

- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

என்.ஆனந்த் வெங்கடேஷ்

காலங்​கள் மாறி​னாலும், வடிவங்​கள் மாறி​னாலும், பண் சுமந்த தமிழ் இசை நம் நினை​வு​களி​லும், நம் நெஞ்​சங்​களி​லும் அழி​யாத மரபாக ஒலித்​துக் கொண்டே இருக்​கிறது. இசை என்​பது கேட்​கப்​படு​வதற்​கான ஒலி​யாக மட்​டும் இல்​லாமல் உணரப்​படு​வதற்​கான அனுபவ​மாக​வும் உள்​ளது.

இயற்கை தந்த மூச்​சில் இருந்து பிறந்​து, மனிதன் உணர்​வு​களால் செதுக்​கி, பண் எனும் மரபு வழி​யில் தமிழ் அதற்கு உயிரூட்​டியது. காற்​றின் சப்​தம் குழலாகி, அலைகளின் ஓசை தாள​மாகி, வண்​டின் ரீங்​கார​மாக விளங்​கும் பண், இன்​றும் நம் இதயங்​களைத் தட்​டிக்​கொண்டே இருக்​கிறது.

          

மனிதனின் முதல் அழுகை இசையோடு தொடங்​கியது. நாம் அதை அப்​போது உணர்ந்​திருக்க மாட்​டோம். ஆனால், பின்​னர் அதற்​கென ஒரு ராகம், அதற்​கென ஒரு சீர் / சந்​தம் இருப்​பதை உணர்ந்​திருப்​போம். ஆக, மனிதன் தன்​னுடைய பிற​வி​யின் தொடக்​கம் முதல் இசையோடு​தான் பயணிக்​கிறான். இயற்​கை​யும் இசை​யும் பிரித்​தறிய முடி​யாதது என்​பதை உணர்ந்த மிகத் தொன்​மை​யான பண்​பாடு​களில் தமிழர் பண்​பாடு முதன்​மை​யானது. அதனால்​தான் குறிஞ்​சி, முல்​லை, மருதம், நெய்​தல், பாலை ஆகிய ஐவகை நிலங்​களுக்​கும் அவற்​றுக்​குரிய பண் எது என்​பதை மிகத் தெளி​வாக உணர்த்​தும் குறிப்​பு​கள் சங்க காலம் தொட்டே நமக்கு கிடைக்​கின்​றன.

இயற்கை - இறைவன் - இசை ஒன்​றோடு ஒன்று பின்​னிப்​பிணைந்து உள்​ளதை நம் மரபு ஏற்​கிறது. இசைக்​கான முதல் ஆசிரியர் இயற்​கை​யாக இருந்​தது. இசை என்​பதும், இசைக் கருவி என்​பதும் இயற்​கை​யின் அங்​கங்​கள்.

ஐவகை நிலங்​களையும் அவற்​றுக்​குரிய பண் ஓசைகளையும் பார்க்​கும்​ போது அந்தந்​தப் பகுதி மக்​கள் வழிபட்ட தெய்​வத்துக்​கு, அந்​தந்த மக்​கள் செய்த வேலைக்கு எது ஓய்​வளித்​ததோ, எது உடனறியச் செய்ததோ, எது அவர்​களை

ஆசு​வாசப்​படுத்தி​யதோ - அந்​தப் பண்​முறையை அவர்கள் ஏற்​றுக் கொண்​டனர். அது அவர்​கள் வாழ்​வியல் முறை​யின் ஓர் அங்​க​மாக மாறியது. அவர்​கள் பயன்​படுத்​திய இசைக் கருவி​களும் அங்ஙனமே அமைந்​தன.

சங்​கப் பாடலில் நமக்கு கிடைக்​கப்​பெறும் மூன்று முக்​கிய​மான இசைக் கருவி​களி​லும் தமிழின் சிறப்பு ‘ழ”கரம் பயின்று வரு​வது வியத்​தகு உண்​மை.

முழ​வு, குழல், யாழ் - இதற்கு முன்​பாகவே ஆதி​யில் ஓர் இயற்​கை​யான வாத்​தி​யம் இருக்​கப் பெற்​றது. அது​தான் ‘வளை’ என்று அழைக்​கப்​படும் சங்​கு. இன்​ன​மும்​கூட கோயில்​களில் சங்கு என்பது பிரார்த்​தனைக்​கான அல்​லது பக்​திக்​கான ஒரு முதன்மை இடம் வகிப்​பதை காண முடி​யும். வைணவ மரபில் கிருஷ்ணன் பாஞ்​சஜன்​யம் என்​கிற சங்கை எடுத்து ஊதும்​போது​தான் போர் தொடங்​கு​வ​தாக​வும், மழை பொழி​வ​தாக​வும் குறிப்​பு​கள் உள்​ளன. எனவே, இசை​யும் இயற்​கை​யும் தமிழும் ஒரே நேர்​கோட்​டில் நிறுத்​திப் பார்க்​கப்பட வேண்​டியவை என்​கிற உண்மை நமக்கு புலப்​படு​கிறது.

பண்​ணா​ராய்ச்சி வித்​தகர் ப.சுந்​தரேச​னார், அவரது மாணாக்​கர் மா. வைத்​தி​யலிங்​கன் ஆகியோர் சிலப்​ப​தி​காரத்​தில் நூற்​றுக்​கணக்​கான பண்​கள் குறித்த குறிப்​பு​கள் இருப்​பதை உணர்த்​துகின்​றனர். “அப்​பனே, பிற​வாமை வேண்​டும். மீண்​டும் பிறப்பு உண்​டேல் உன்னை மறவாமை வேண்​டும். நீ ஆடு​கின்ற போது உன் திரு​வடிக்​கீழ் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருத்​தல் வேண்​டும்” என்று வேண்​டி​னார் காரைக்​கால் அம்​மை​யார்.

ஞானசம்​பந்த பெரு​மான் தம் பாடல்​களில் 23 பண் அமைத்​துப் பாடி​யுள்​ளார் என்​றும் ஏறத்​தாழ 110 சந்​தங்​களை தன் பாடல்​களில் அமைத்​துள்​ளார் என்​றும் அறிஞர்​கள் தெரிவிக்​கின்​றனர். திருநீல​கண்ட யாழ்ப்​பாணரும் இறைவன் புகழை யாழில் இசைத்​தார். சுந்​தரர், ‘ஏழிசை​யாய் இசை பயனாய் எம்​முடைய தோழனு​மாய்’ என்று இறைவனை இசை​யின் வடிவ​மாகவே தரிசித்​திருக்​கிறார். “உள்​ளத்​தில் உண்மை ஒளி உண்​டா​யின் வாக்​கினிலே ஒளி உண்​டாகும்” என்​பார் மகாகவி பார​தி.

பக்தி என்​பது இறைவனோடு ஒன்​று​வது என்​றால், அதற்​கான வாகனம் இசை​தான். இசை என்​பது இயற்​கையோடும் இறைவனோடும் கலப்​ப​தற்​கான ஒரு பயிற்​சிக் களம்.

சங்க இலக்​கி​யங்​கள் தொடங்கி சிலப்​ப​தி​காரம், தேவாரம், திவ்​யப்​பிரபந்​தம் வரை பண், பாடலுக்​குத் தாள​மும் உயிரும் அளிக்​கும் மைய​மாக விளங்​கியது. காலப்​போக்​கில் இசை பல புதிய வடிவங்​களை எடுத்​தா​லும், பண் என்​பது தமிழ் இசை​யின் அடித்​தள​மாக​வும் மரபுக்​கும் நவீனத்​துக்​கும் இடையே பால​மாக​வும் இருந்து இசை​யின் வளர்ச்​சி​யைத் தாங்கி நிற்​கிறது. இசை உயிருடன் இருக்​கும் வரை தமிழ் உயிருடன் இருக்​கும். இந்த ஒலியைப் பாது​காப்​பது நம் கடமை மட்​டுமல்​ல. நம் உரிமை, உணர்வு - அதுவே நம்​ அடை​யாளம்​.

கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி - தொடர்புக்கு > anaushram44@gmail.com

SCROLL FOR NEXT