கலை

சுத்த சாவேரிக்கு மகுடம் சூட்டிய சுதா ரகுநாதன் | சென்னை இசை அரங்கம்

கே.சுந்தரராமன்

சென்னை: மியூசிக் அகாட​மி, ஒவ்​வோர் ஆண்​டும், வாக்​கேயக்​காரர்​கள், மகா வித்​வான்​கள், இசை வல்​லுநர்​கள், இசை ஆசிரியர்​களை சிறப்​பிக்​கும்​வித​மாக இசை​விழாவை நடத்தி வரு​கிறது, இந்த ஆண்டு வாக்​கேயக்​காரர் முத்​துசு​வாமி தீட்​சிதரின் 250-வது ஜெயந்​தி​யாக அமைந்​துள்​ள​தால், அவரை கௌரவிக்​கும் வித​மாக 99-வது இசை​விழா நடை​பெற்று வரு​கிறது.

இதில், விதூஷி சுதா ரகு​நாதனின் கச்​சேரி நடை​பெற்​றது. அவருக்கு பக்​கபல​மாக எம்​பார் எஸ்​.கண்​ணன் (வயலின்), சுமேஷ் நாராயணன் (மிருதங்​கம்), கிருஷ்ணா ஸ்ரீராம் (கடம்) இருந்​தனர். ஹரி​கேசநல்​லூர் முத்​தையா பாகவதரின் கமாஸ் ராக தரு வர்​ணத்​துடன் கச்​சேரியைத் தொடங்​கி​னார் சுதா ரகுநாதன்.

அடுத்​த​தாக மைசூர் வாசுதே​வாச்​சா​ரி​யாரின் கௌளை ராக க்ரு​தியை (பிரண​மாம்​யகம் கௌரிசுதம்) பாடி​னார். பிறகு அதி​க​மாக கேட்​டி​ராத தியாக​ராஜ சுவாமி​யின் முகாரி ராகக் கீர்த்​தனையை (தலசி நந்​தனே) பாடியதும் கச்​சேரி சூடு பிடிக்​கத் தொடங்​கியது. பின்​னர் சாரங்கா ராகத்​தில் சிறிய ஆலாபனை செய்​து​விட்​டு, முத்​துசு​வாமி தீட்​சிதரின் ‘சா​ரங்கராகப்​ரியே’ எனத் தொடங்​கும் க்ரு​தி​யைப் பாடி​னார்.

‘சாரஸ பதயுகளே தத்​-த்​வம் பத அர்த யுகளே’ என்ற வரிக்கு ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார். இந்த க்ரு​தி​யில் மகா​விஷ்ணு​வின் சகோ​தரி​யாக​வும், மகிஷனை அழித்​தவளாக​வும், பரமாத்மா – ஜீவாத்மா இரண்​டு​மாக இருப்​பவளாக​வும் பார்​வதி தேவி போற்​றப்​படு​கிறாள். அடுத்​த​தாக பாப​நாசம் சிவனின் மலய​மாருத ராக பாடலை (கற்பக மனோஹ​ரா) பாடி​னார்.

பிர​தான ராக​மாக சங்​க​ராபரணம் அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனை​யில் மேல் ஸ்தா​யி, கீழ் ஸ்தா​யிகளில் பாடும்​போது ராகத்​தின் செழுமை கூடியது. சற்றே கரஹரப்​ரி​யாவை (சங்​க​ராபரணத்​தில் ரி-நி) கோடிட்​டுக் காட்​டி​விட்​டு, கிரஹபேத ராகங்​களாக கல்​யாணி​யும், யமன் கல்​யாணி​யும் அமைந்​தன.

பின்​னர் முத்​துசு​வாமி தீட்​சிதரின், ‘சதாசிவம் உபாஸ்​மஹே’ எனத் தொடங்​கும் க்ரு​தி​யைப் பாடி​னார். ‘பு​ராண புருஷம் புராந்​தகம் சங்​க​ராபரண பாச​மான தேஹம்’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார். தனி ஆவர்த்​தனத்​தில் சுமேஷ் நாராயணன், கிருஷ்ணா ஸ்ரீராம் தங்​கள் மிருது​வான கோர்​வை​களால் கச்​சேரிக்கு அழகு சேர்த்​தனர். ஸ்ரீவரத கோபால விட்​டல​தாசர் தேவர்​நா​மாவை (குனிகுனியோ கிருஷ்ணா) பாடிய பிறகு ராகம் தானம் பல்​லவிக்​குச் சென்​றார் சுதா.

சுத்​த​சாவேரி ராகத்​தில், திஸ்ர ஜாதி அட தாளத்​தில் அமைந்த பல்​ல​வியை (ஸ்ரீதர முரளி சுஷிமணி கமலபதா பரமபுருஷா சனாதனா முராரி) பாடி​னார். ராக​மாலிகை ஸ்வரங்​களாக நளின​காந்​தி, சுநாத​விநோ​தினி (இடையே நிஷாதத்​தில் ஸ்வரபேதம் - ரேவதி சாயல்), மத்​ய​மாவதி அமைந்​தன.

பாடகரை நிழல் போல் தொடர்ந்து வந்த எம்​பார் கண்​ணன் பிர​தான ராகம், தேவர்​நா​மா​வின் சிட்​டைஸ்​வரம், ராகம் தானம் பல்​ல​வி​யில் முத்​திரை பதித்​தார். சாய்​பஜன் (மன்கி ஆன்​கேன் கோலோ), அம்​புஜம் கிருஷ்ணா​வின் ‘கண்​ணனிடம் எடுத்து சொல்​லடி’ என்ற ராக​மாலிகை (செஞ்​சுருட்​டி, புன்​னாகவ​ராளி, நாத​நாமக்​ரி​யா) பாடல் ஆகிய​வற்​றுடன் கச்​சேரியை நிறைவு செய்​தார் சுதா ரகுநாதன்.

தனது தாய் சூடா​மணி, வித்​வான் பி.​வி.லட்​சுமணன், விதூஷி எம்.எல்​.வசந்​தகு​மாரி ஆகியோரிடம் இசை பயின்ற சுதா, தற்​போது பிரபல கர்​னாடக இசைக் கலைஞ​ராக உள்​ளார். இந்​தியா மட்​டுமின்​றி வெளி​நாடு​களி​லும்​ கச்​சேரி​கள்​ செய்​து வரு​கிறார்​. மேலும்​ பல மாணவர்​களுக்​கு இசை பயிற்​றுவிக்​கிறார்​.

SCROLL FOR NEXT