வேலூர் விஐடியில் ‘ரிவேரா’ கலை விழாவை தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். உடன், பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர்.
வேலூர்: வேலூர் விஐடி பல்கலை.யில் ‘ரிவேரா-2026’ கலை விழா நேற்று தொடங்கியது. விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் விழாவைத் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “இந்தியா உலக அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும். கல்வியின் மூலம் அதை சாதிக்க வேண்டும். விஐடி எப்போதும் முன்மாதிரி நிறுவனமாகத் திகழ்கிறது. விஐடி மாணவர்கள் 84 நாடுகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு 14,500 மாணவர்களுக்கு சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது மேலும் அதிகரிக்கும்” என்றார்.மிதாலி ராஜ் பேசும்போது, “எல்லோரும் கனவு காண்கிறார்கள்.
அதை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும். தினமும் சிறிது நேரமாவது விளையாட்டில் ஈடுபட வேண்டும்” என்றார். தொடர்ந்து, திரைப்பட பின்னணிப் பாடகி சுனிதி சவுஹானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மிதாலி ராஜ் பரிசு வழங்கினார்.
விழாவில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர்விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழா மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.