கலை

சென்​னை​யில் கிருஷ்ண லீலை நாடகம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணரின் மகிமை​களை​யும் தெய்​வீக வாழ்க்கையையும் போற்​றும் வகை​யில் ‘ராஜா​தி​ராஜ் யாத்ரா’ எனும் பிரம்​மாண்ட நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தன்​ராஜ் நத்​வானி​யின் கருத்​துரு​வாக்​கத்​தில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள‌ இந்த நாடகம் பல்​வேறு நகரங்​களில் அரங்கேற்​றப்​பட்டு ரசிகர்​களிடம் வரவேற்​பைப் பெற்​றது. இந்​நிலை​யில் இந்​நாடகம் முதல் முறை​யாக சென்னையில் நடக்​கிறது.

          

நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறு​வனம் லாஃபிங் வாட்​டர் புரொடக் ஷன்​ஸ், ஹோம்​பாளே என்​டர்​டெ​யின்​மென்ட் மற்​றும் கலாநேஷன் ஆகிய நிறு​வனங்​கள் இணைந்து இதை அரங்​கேற்றுகிறது. “அதிக பொருட்​செல​வில் சர்​வதேச தரத்​தில் பிரம்​மாண்ட அரங்​கு​களோடு இசை, நடனம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என‌ பார்​வை​யாளர்​களை ஈர்க்​கும் வகை​யில் இந்த நாடகம் திகழும்.

சென்னை சேத்​துப்​பட்டு ஹாரிங்​டன் சாலை​யில் உள்ள சர்முத்தா வெங்​கட சுப்பா ராவ் அரங்​கில் மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்​நாடகம் நடக்​கும்” என்​று நாடகக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர். இதற்​கான டிக்கெட்டு​கள் புக் மை ஷோவில் கிடைக்​கும் என்று கூறப்பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT