இந்திய நாட்டின் சுதந்திர வரலாற்றை விளக்கும் விதமாக கோமல் தியேட்டர் நாடக குழு தயாரிப்பில், ‘என்று தனியும்’ என்ற புதிய தமிழ் நாடகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நேற்று 2-வது நாளாக அரங்கேறியது. | படம்: எல்.சீனிவாசன் |

 
கலை

சென்னையில் கோமல் தியேட்டர் குழுவின் ‘என்று தணியும்’ நாடகம் அரங்கேற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் அரங்​கேறிய கோமல் தியேட்​டர் குழு​வின் ‘என்று தணி​யும்’ நாடகம், இந்​திய சுதந்​திரப் போராட்ட வரலாற்றை கண்​முன் நிறுத்தி பார்​வை​யாளர்​களின் வரவேற்பை பெற்​றது.

கோமல் தியேட்​டர் குழு​வின் தயாரிப்​பில், இந்​தி​யா​வின் 300 ஆண்​டு​கால சுதந்​திரப் போராட்ட வரலாற்றை தத்​ரூப​மாக விளக்​கும் ‘என்று தணி​யும்’ என்ற பிரம்​மாண்ட வரலாற்று நாடகம் சென்னை ஆழ்​வார்​பேட்டை நாரத கான சபா​வில் நேற்று முன்​தினம் அரங்​கேற்​றம் செய்​யப்​பட்​டது. 2-வது நாளாக நேற்​றும் அதே அரங்​கில் இந்த நாடகம் நடத்​தப்​பட்​டது.

பிரபல நாடகக் கலைஞர் மறைந்த கோமல் சுவாமி​நாதனின் மகள் தாரிணி கோமல் இதை இயக்​கி​யுள்​ளார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இதில் பிரின்ட் பார்ட்​ன​ராக இணைந்​தது.

மகாகவி பார​தி​யாரின் பாடல் வரி​களுக்கு அவரது கொள்​ளுப் பேரன் ராஜ்கு​மார் பாரதி இசையமைக்க, எல்​இடி மற்​றும் ஏஐ தொழில்​நுட்​பக் காட்​சிகளை கண்​ணன் ருத்​ராபதி அமைத்​திருந்​தார்.

நடனம், சண்​டைப் பயிற்​சியை மதுசூதனனும், கதை சொல்​லி​யாக மருத்​து​வர் இளங்கோ குமரனும், கருப்​பொருள் நிபுண​ராக சதீஷ்கு​மாரும், தயாரிப்பு மற்​றும் இயக்​கக் குழு​வில் சசிகு​மார், அனுப் கண்​ணனும் பங்​காற்​றினர்.

ஆடியோ மிக்​ஸிங் பணி​களை கோபி​யும், ஒளி வடிவ​மைப்பை வினோத்​கு​மாரும், ஆடை வடிவ​மைப்பை அசோக்​கு​மாரும் மேற்​கொண்​டனர்.

1608-1947 கால​கட்​டத்​தில் நடை​பெற்ற சுதந்​திரப் போராட்​டத்​தின் வீரச் சம்​பவங்​கள், தியாகங்​கள், ஆங்​கிலேயரின் ஆதிக்​கச் சூழ்ச்​சிகள் ஆகியவை ஆழமாக விளக்​கப்​பட்​டன.

காந்​தி, நேரு, படேல், பகத்​சிங் உள்​ளிட்ட 60 வரலாற்​றுக் கதா​பாத்​திரங்​களை ஏற்று 19 நடிகர்​கள் திறம்பட நடித்து பாராட்டு பெற்​றனர். சிவகங்கை அரண்​மனையை மீட்​டெடுத்​தல், மருது பாண்​டியர்​கள் தூக்​கி​லிடப்​படு​தல், ஜான்சி ராணி வீரமரணம், ஜாலியன் வாலா​பாக் படு​கொலை, உப்பு சத்​தி​யாகிரகம், இந்​தியா - பாகிஸ்​தான் பிரி​வினை உள்​ளிட்ட காட்​சிகள் பார்​வை​யாளர்​களை மெய்​சிலிர்க்க வைத்​தன.

நாடக இயக்​குநர் தாரிணி கோமல் கூறும்​போது, “இந்த வரலாற்று நாடகத்தை மேடையேற்ற ஒன்​றரை ஆண்​டு​கள் விரி​வான கள ஆய்வு மேற்​கொண்​டோம்.

சுதந்​திர தினம், ‘வந்தே மாதரம்’ முழக்​கத்​தின் 150-வது ஆண்​டு, சென்னை தினம் ஆகிய கொண்​டாட்​டங்​களுக்கு நடுவே நாடகம் அரங்​கேறியது மகிழ்ச்​சி.

தேச விடு​தலைக்​காக இன்​னு​யிர் ஈந்த தியாகி​கள், பெயர்​ தெரி​யாத எண்​ணற்​ற விடு​தலை வீரர்​களுக்​கு இந்​த ​நாடகத்​தை சமர்​ப்​பிக்​கிறோம்​” என்​று நெகிழ்​ச்​சி​யுடன்​ தெரி​வித்​​தார்​.

SCROLL FOR NEXT