கலை

பேகடா ராக பல்லவியில் ஒளிர்ந்த அனிருத் | சென்னை இசை அரங்கம்

கே.சுந்தரராமன்

சென்னை: மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா​வில் வித்​வான் அனிருத் வெங்​கடேஷின் கச்​சேரி நடை​பெற்​றது. அவருக்கு பக்​கபல​மாக சிதம்​பரம் ஜி.பத்​ரி​நாத் (வயலின்), ஆர்​.​ராம்​கு​மார் (மிருதங்​கம்), ஜி.வெங்​கடேஷ் (மோர்​சிங்) இருந்​தனர்.

‘கருண ஜூடு நின்​னு’ எனத் தொடங்​கும் ராகத்​தில் அமைந்த சியாமா சாஸ்​திரி​யின் சாஹித்​யத்​துடன் கச்​சேரியை தொடங்​கினார் அனிருத் வெங்​கடேஷ். அடுத்​த​தாக, சஹானா ராகத்​தில் அமைந்த ஆண்​டாள் திருப்​பாவையை (குத்​து​விளக்​கெரிய) பாடி​னார். சாரங்கா ராகத்​தில் சிறிய ஆலாபனை செய்​து​விட்​டு, தியாக​ராஜ சுவாமி​யின் கீர்த்​தனையை (மாமவ ரகு​ரா​மா) பாடி​னார்.

இந்த கீர்த்​தனை​யில் ராமபி​ரானோடு விளை​யாட்​டாகப் பேசுகிறார் தியாக​ராஜர். ‘ஒரு​முறை​யா​வது என்​னுடைய அடைக்​கலம் தேவை என்று யார் இருக்​கிறாரோ, அவரை அனைத்​து​வித துன்​பங்​களில் இருந்​தும் விடு​விப்​பேன். இது உறுதி என்று கூறி​விட்​டு, என்னை மட்​டும் என் பாவங்​களில் இருந்து விடுவிக்​காதது ஏன் போரில் உன் அஸ்​திரங்​கள் உடைந்​து ​விட்​ட​தா?’ என்று ராமபி​ரானிடம் கேட்​கிறார் தியாக​ராஜர்.

அனிருத் வெங்​கடேஷ் கச்​சேரி​யில் பிர​தான ராக​மாக தோடி அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பிறகு, முத்​துசு​வாமி தீட்​சிதரின் ‘ சுப்​பிரமண்யோ மாம் ரக் ஷது’ எனத் தொடங்​கும் க்ரு​தி​யை பாடி​னார். ‘ஷதகோடி பாஸ்கர ஷோபாகர’ என்ற வரி​யில் நிர​வல் செய்து ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார். தனி ஆவர்த்​தனத்​தில் ராம்​கு​மாரும், வெங்​கடேஷும் கச்​சித​மான கோர்​வை​களை வாசித்​து, கச்​சேரியை களை​கட்​டச் செய்​தனர்.

ராகம் தானம் பல்​லவிக்கு செல்​வதற்கு முன்​ன​தாக தியாக​ராஜ சுவாமி​யின் கலாநிதி ராகத்​தில் அமைந்த கீர்த்​தனையை (சின்ன நாடென) பாடி​னார் அனிருத். ராகம் தானம் பல்​லவிக்கு அவர் தேர்வு செய்த ராகம் பேக​டா. ‘தி​யாக​ராஜாய நமஸ்தே காத்​யாயணி பதே’ என்ற பல்​ல​வியை த்ரி​காலத்​தி​லும் பாடி​னார். ராக​மாலிகை ஸ்வரங்​கள், வராளி, சுருட்​டி, கான​டா, பெஹாக் ராகங்​களில் அமைந்​தன. தொடக்​கம் முதலே பாடகருக்கு அனுசரணை​யாக வயலின் வாசித்த பத்​ரி​நாத், பிர​தான ராகம் மற்​றும் ராகம் தானம் பல்​ல​வி​யில் மிளிர்ந்​தார். முத்​துசு​வாமி தீட்​சிதரின் த்விஜாவந்தி ராக க்ரு​தி​யுடன் (சேத பாலக்​ருஷ்ணம்) கச்​சேரியை நிறைவு செய்​தார் அனிருத்.

அமெரிக்​கா​வில் பிறந்து வளர்ந்​தவர் அனிருத். விதூஷிகள் பத்மா குட்​டி, சுகந்தா காளமேகம், வித்​வான்​கள் பாளை சி.கே.​ராமச்​சந்​திரன், சீதா​ராம சர்​மா, பி.எஸ்​.​நா​ராயணசு​வாமி​யிடம் இசை பயின்​றவர். லாஸ் ஏஞ்​சல்ஸில் மென்​பொருள் பொறி​யாள​ராக பணிபுரி​யும் இவர், இந்​தியா உட்பட பலநாடு​களில் கச்​சேரி​கள் செய்து வரு​கிறார்.

மியூசிக் அகாட​மி​யில் நடை​பெறும் கச்​சேரி​களுக்​கு, சப்-ஜூனியர், ஜூனியர், சப்​-சீனியர், சீனியர் என்று பல பிரிவு​களில் பரிசுகள் வழங்​கப்​படும். சிறந்த ராகம் தானம் பல்​லவிக்​கும் விருது அளிக்​கப்​படும். இது இளம் வித்​வான்​களுக்கு ஊக்​கம் தரு​வ​தாக அமை​யும். மியூசிக் அகாட​மி​யின் டிசம்​பர் மாத இசை​விழா கச்​சேரி​களில், சிறந்த ஜூனியர், சப்​.சீனியர் விருதுகளை அனிருத் பெற்​றுள்​ளது குறிப்​பிடத்​தக்கது.

SCROLL FOR NEXT