அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தகவல் தொடர்பு அதிகாரியாக இந்தியர் நியமனம்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தகவல் தொடர்பு குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போதே வெள்ளை மாளிகையின் உயர் பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் ஷா (32) நியமிக்கப்பட்டார். வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பின் குறிப்பிட்ட சில உதவியாளர்களிடம் அவரும் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதிபரின் துணை உதவியாளர் மற்றும் தகவல் தொடர்பு துணை இயக்குநராக பணியாற்றினார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபரின் தகவல் தொடர்பு குழுவில் ராஜ் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று பேர் அடங்கிய இந்த குழுவில் ஹோப் ஹிக்ஸ், எலி மில்லிர் மற்றும் ராஜ் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிபர் ட்ரம்ப்பின் துணை உதவியாளராக ராஜ் ஷா இருப்பதுடன், பத்திரிகை தகவல் தொடர்பு துணை செயலாளராகவும் பதவி வகிப்பார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு இயக்குநராக நம்பிக்கைக்குரிய ஹோப் ஹிக்ஸ்ஸை நியமித்துள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்க தேர்தலின் போது ஹிலாரிக்கு எதிரான எல்லா தகவல்களையும் திரட்டி அவருக்கு எதிராக பிரசாரத்தை வடிவமைத்து கொடுத்தவர் ராஜ் ஷா. இவரது பெற்றோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். கனக்டிகட் நகரில் ராஜ் ஷா பிறந்து வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

32 mins ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்