தீவிரவாதிகள் இணையதளங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு இந்தியா வேண்டுகோள்

By பிடிஐ

தீவிரவாதிகள் இணையதளங்களை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது பொது சபை கூட்டம் நியூயார்க் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘தீவிரவாதிகள் இணையதளங்களை பயன்படுத்துவதை தடுத்தல்’ என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது:

அரசுத் துறைகள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் இணையதளம் பயன்படுத்து கின்றனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள், மத அடிப்படைவாதத்தைப் பரப்புதல், நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல் உள்ளிட்ட செயலுக்கு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். எனவே, தீவிரவாதிகள் இணையதளங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டியது அவசியம்.

இந்தப் பிரச்சினைக்கு, ‘குளோபல் இன்டர்நெட் போரம் டு கவுன்ட்டர் டெரரிசம்’ (ஜிஐஎப்சிஜி) என்ற அமைப்பு தீர்வாக அமையும். இதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன்மூலம் தீவிரவாத தாக்குதலை தடுப்பதுடன், தீவிரவாதிகளிடமிருந்து இணையதள பயன்பாட்டாளர்களையும் பாதுகாக்க முடியும். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

ஜோதிடம்

29 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்