மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள்: வங்கதேச பிரதமர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மியான்மரில் பவுத்த மதத்தினருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் யாங்கி லீ தெரிவித்துள்ளார்.

மியான்மர் ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை சுமார் 1.2 லட்சம் பேர் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். எல்லையோர முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் உணவு, குடிநீர். மருந்து வசதியின்றி பரிதவித்து வருகின்றனர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் நேற்று கூறியதாவது: மியான்மர் அகதிகளை பராமரிப்பது எங்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறோம். இந்தப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் மியான்மருக்கு அழுத்தம் அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளை மியான்மர் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்