காஸாவின் பதற்றமான பகுதியிலிருந்து 4 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: ஐ.நா. தகவல்

By செய்திப்பிரிவு

காஸா பகுதியில் பணி புரிந்துக்கொண்டிருந்த 4 இந்திய தையல் தொழிலாளர்கள், பதற்றமான பகுதியிலிருந்து, இந்திய பிரதிநிதி அலுவலக உறுப்பினர்களின் உதவியோடு மீட்கப்பட்டதாக ஐ. நா. தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காஸா பகுதி, தற்போது ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இருத்தரப்பிலான தாக்குதல், கடந்த 13 நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், காஸாவில், தையல் பணிபுரிந்து வந்த லக்னோவை சேர்ந்த அப்துர் ரகுமான், மும்பையைச் சேர்ந்த அன்வர் உசேன், பதான் கஞ்சை சேர்ந்த கமாலி மற்றும் பேரய்லியை சேர்ந்த அகமத் என்ற 4 இந்தியர்களும், காஸாவிலிருக்கும் இந்திய பிரதிநிதி அலுவலக உறுப்பினர்களால் பத்திரமாக மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் ஐ.நா குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய - அமெரிக்க பிரதிநிதி புஷ்கர் ஷர்மா கூறுகையில், "பதற்றமான பகுதிகளிலிருந்து பல நாடுகளைச் சேர்ந்த மக்கள், ஜோர்டானுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் மனித உரிமைகள் கண்கானிப்பு அமைப்பு மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினாரால், தங்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுவர்.

அதே போல, பாலஸ்தீனர்களை திருமணம் செய்துகொண்ட சில இந்திய பெண்கள் மற்றும் அன்னை தெரசா அறக்கட்டளை நிறுவனத்தைச் சேர்ந்த பலர், அந்த பகுதியிலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். ஆனால், அவர்களுக்கு ஆபத்தான சமயங்களில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்