உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் பணிகளில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதி தன்மயா லால் வலியுறுத்தல்

By ஐஏஎன்எஸ்

உலகம் முழுவதும் சண்டையை தடுத்து நிறுத்தி அமைதியை நிலைநாட்டும் பணிகளில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். இதற்கான இலக்கை எட்டுவதற்காக இந்தியா பெண்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கான நிரந்தர துணை பிரதிநிதி தன்மயா லால் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை போர் மற்றும் தீவிரவாதத்தின் தந்திரமாக கட்டவிழ்க்கப்படுவது குறித்த விவாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடந்தது. இதில் தன்மயா லால் பங்கேற்று பேசியதாவது:

சண்டை நிறுத்தம் மற்றும் அதற்கான தீர்வு விவகாரங்களில் பெண்களை ஈடுபடுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு ஒழுங்குமுறை ஆலோசனைகள் மட்டும் போதாது. அடிமட்ட நிலையில் இருந்து அதற்கான திறன் வளர்ப்பு, அமைப்புகளை நிறுவுவதல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

திறன் வளர்ப்பை பொறுத்த வரையில், பெண்களுக்கு தேவையான சிறப்புப் பயிற்சிகளை இந்தியா அளித்து வருகிறது. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடும் பெண் அமைதி காப்பாளர்களுக்கு அந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

டெல்லியில் ஐ.நா. அமைதி படை சார்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்புப் பயிற்சி முகாமில் 30 நாடுகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பங்கேற்றனர். ஐ.நா. அமைதி படை நடவடிக்கைக்காக கடந்த 2007-ல் லைபீரியாவில் முதல் பெண் போலீஸ் படையை அறிமுகப்படுத்தி இந்தியா வரலாறு படைத்தது. இதன் பலனாக தற்போது லைபீரியாவில் பெண் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்திய பெண் போலீஸ் அதிகாரிகளின் பணிகளால் ஈர்க்கப்பட்டு, லைபீரியாவில் அந்நாட்டு பெண் களும் தாமாகவே முன்வந்து அந்த துறையில் இணைந்துள்ளனர். இதனை அந்நாட்டு அதிபர் எல்லன் ஜான்சனும் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.

அமைதி காக்கும் திட்டங்களுக்கு பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய பெண்களின் பங்கு 15 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்