இந்தியா வழியில் பாகிஸ்தான்: ரூ.5,000 நோட்டுக்கு தடை விதிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

ஊழல்மிக்க நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 117-வது இடத்தில் உள்ளது. இதனால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவைப் போல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இதற்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி யின் எம்பி உஸ்மான் சைபுல்லா என்பவர் 5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கும் தீர்மா னத்தை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. எனினும் நாடாளுமன்ற மேலவையில் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கே அதிக பெரும்பான்மை இருந்ததால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்பி ஒருவர் கூறும்பாது, ‘‘சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் நாங்கள் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம்’’ என்றார்.

பாகிஸ்தான் சட்ட அமைச்சர் ஜஹித் ஹமீது கூறும்போது, ‘‘எதிர்க்கட்சிகளின் இத்தகைய நடவடிக்கை நாட்டின் பொருளா தாரத்தை வெகுவாக பாதிக்கும். இந்தியாவில் இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. பொதுமக்கள் தான் அதிக சிரமங் களைச் சந்தித்து வருகின்றனர். ஒட்டுமொத்த பணப் புழக்கத்தில் 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 30 சதவீத இடத்தை பிடித்திருக்கின்றன. திடீரென அதற்கு தடை விதித்தால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

உலகம்

7 mins ago

விளையாட்டு

10 mins ago

சுற்றுச்சூழல்

14 mins ago

சினிமா

22 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

54 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்