எங்களை சீண்டினால் மோசமான விளைவுகள் ஏற்படும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

எங்களை சீண்டிப் பார்த்தால் மோச மான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சீன அரசின் அதிகாரபூர்வ ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தலையங்க பக்கத்தில் நேற்று வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது:

சீன கடல் பகுதியில் மிதந்த அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி அண்மையில் கைப்பற் றப்பட்டது. அந்த நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் திருப்பி ஒப்படைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போதைய அமெரிக்க அரசும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

ஆனால் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரிகிற நெருப் பில் எண்ணெயை ஊற்றுவது போல சர்ச்சைக்குரிய கருத்து களை வெளியிட்டு வருகிறார். அமெரிக்க நீர்மூழ்கியை சீனா திருடி விட்டதாகவும் அதைச் சீனாவே வைத்துக் கொள்ளட்டும் என்றும் அவர் தரக்குறைவாக விமர்சிக்கிறார்.

அதிபருக்கு உரிய தகுதிகள் ட்ரம்பிடம் இல்லை. வல்லரசு நாடான அமெரிக்காவை வழிநடத் தும் திறன் அவரிடம் இல்லை. அமெரிக்க கடற்படைகூட ‘திருட்டு’ என்ற வார்த்தையை பயன்படுத்த வில்லை. ஆனால் ட்ரம்ப் திருட்டு பழி சுமத்துகிறார். அவரது செயல் பாடுகள் குழந்தைத்தனமாக உள் ளது. ஒன்றுபட்ட சீனா என்ற கொள்கைக்கு எதிராகவும் ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார். அவர் இதுவரை அதிகாரபூர்வமாக அதிபராக பதவியேற்கவில்லை. அதனால் சீனா பொறுமை காத்து வருகிறது. அதிபராக பதவியேற்ற பிறகும் இதேபோன்று ட்ரம்ப் நடந்து கொண்டால் சீனா பொறுமை காக்காது. சீனாவைச் சீண்டி பார்த்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் சீனாவின் பகிரங்க எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்