தற்கொலைப்படை தாக்குதலில் 48 ராணுவ வீரர்கள் பலி

By பிடிஐ

உள்நாட்டுப் போரால் பாதிக் கப்பட்டுள்ள ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று நிகழ்த்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 48 ராணுவ வீரர்கள் பலியாயினர். இதில் மேலும் 50 பேர் காயமடைந்தனர்.

எமன் நாட்டில் அல்-சவுலாபன் ராணுவப் படைத்தளத்துக்கு அருகே அல்-அரிஷ் மாவட்டம் ஏடன் நகரில் சிறப்பு பாதுகாப்புப் படை தலைவர் கர்னல் நசெர் சரியாவின் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு வெளியே, தங்களது சம்பள பணத்தைப் பெறுவதற்காக ராணுவ வீரர்கள் குழுமியிருந்தனர்.

இதில் வீரரைப் போல ஊடுருவியிருந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கு கூடியிருந்த 48 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாயினர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டுவரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அல்-சவுலாபன் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 48 பேர் பலியானதுடன் 29 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

கல்வி

24 mins ago

சுற்றுச்சூழல்

26 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்