இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு

By ஏபி

இந்தோனேசியாவில் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, "இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 1,350 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோடோங்கா கிராமத்தில் உருவாகியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தோனேசியாவின் சுற்றுலா தீவுப் பகுதியான பாலி போன்ற இடங்களிலும் உணரப்பட்டதாக இந்தோனேசிய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை.

டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி இந்தோனேசியாவில் அசெஹ் நகரில், ரிகடர் அளவில் 6.5ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்