இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்த பாகிஸ்தான்

By பிடிஐ

தாலிபான் மற்றும் அல் கய்தா தொடர்புடைய இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தெஹ்ரீக் - இ- தாலிபான்,பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்புடைய ஜமாத் உல் அஹ்ரார், மற்றும் லஷ்கர் இ ஜாங்வி அல் அலாமி ஆகிய இரு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் டான் நியூஸ் கூறியுள்ளது.

பாகிஸ்தான் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் இணையதளத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ஜமாத்-உத்-தவா அமைப்பின் பெயரும் உள்ளது, அதாவது ஜனவரி 2007 முதல் இந்த அமைப்பின் பெயர் ‘கண்காணிப்பில் உள்ள அமைப்பு’ என்ற நிலையில் உள்ளது. இந்த அமைப்பின் வன்முறைகளுக்கு எதிராக போதிய சான்றுகள் கிடைத்தால் இந்த அமைப்பும் தடை செய்யப்படும்.

ஆயினும், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இ மொமகது ஆகிய தீவிரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் ஜனவரி 14, 2002 முதல் உள்ளது.

தற்போது தடைசெய்யப்பட்ட லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத குழு பஞ்சாப் மாகாணத்திலிருந்து இயங்குவது, குவெட்டாவில் சமீபத்தில் போலீஸ் பயிற்சி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதீல் 61 பேர் பலியாக இந்த பயங்கரவாத அமைப்பே காரணம்.

தடைசெய்யப்பட்ட மற்றொரு அமைப்பான் ஜமாத்-உல்-அஹ்ரார் அரசு மருத்துவமனையில் குவெட்டாவில் தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்றுக் கொண்டது, இதில் 75 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், மேலும் 115 பேர் காயமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

35 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்