அமெரிக்க அதிபர் தேர்தல்: மேலும் 29 வேட்பாளர்கள்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரியும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது. கடந்த 1869 முதல் இரு கட்சிகளைச் சேர்ந்த ஒருவரே அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருகின்றனர்.

இந்த 2 கட்சிகளைத் தவிர்த்து பல்வேறு கட்சிகளின் சார்பில் மேலும் 29 அதிபர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். லிபரேஷன் கட்சியைச் சேர்ந்த கேரி ஜான்சன், கிரீன் கட்சியைச் சேர்ந்த ஜில் ஸ்டீன் உள்ளிட்டோருக்கு குறிப்பிட்ட மாகாணங்களில் செல்வாக்கு அதிகமாக உள்ளது.

மூன்றாம் தரப்பு வேட்பாளர்களால் குறிப்பிட்ட மாகாணங்களில் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இதைத் தடுக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் அமித் குமார் புதிய செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி மூலம் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து ஹிலாரிக்கு ஆதரவு திரட்ட முடியும்.

இதுகுறித்து அமித் குமார் கூறியபோது, எனது செயலியை கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்தேன். இதுவரை 25-க்கும் மேற்பட்ட தடவை எனது செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹிலாரிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வாக்குகள் சிதறி ட்ரம்ப் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த செயலியை உருவாக்கினேன். எனது முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்