பிரிட்டன் பிரதமராக 45 நாள் மட்டுமே பதவி விகித்த லிஸ் டிரஸ்ஸுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி அலவன்ஸ்

By செய்திப்பிரிவு

லண்டன்: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அரசு வரி குறைப்பு திட்டங்களில் மேற்கொண்ட குளறுபடியான நடவடிக்கைகளையடுத்து பிரிட்டன் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு கணிசமாக வீழ்ச்சியடைந்தது.

ஏற்கெனவே வாழ்க்கை செலவினம் அதிகரித்து அவதிக்குள்ளான பிரிட்டன் மக்களுக்கு பவுண்ட் மதிப்பில் ஏற்பட்ட சரிவு கவலையை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்த நிலையில், அரசின் குளறுபடியான அறிவிப்புகளுக்கு பொறுப்பேற்று பிரிட்டன் நிதி அமைச்சர் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ்ஸும் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் பதவியில் மொத்தம் 45 நாட்கள் மட்டுமே இருந்த லிஸ் டிரஸ்ஸுக்கு ஆண்டுக்கு 1,15,000 பவுண்டை அலவன்ஸாக பெறும் உரிமை சட்டப்படி அவருக்கு உள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ.1.05 கோடியாகும்.

இதுகுறித்து ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிட்டன் பிரதமர் பதவியை ஸிஸ் டிரஸ் மிக குறுகிய காலமே வகித்த போதிலும் அவர் பொது கடமை செலவு அலவன்ஸை (பிடிசிஏ) பெறுவதற்கு முழு தகுதியுள்ளவராகிறார். முன்னாள் பிரதமர்கள் தொடர்ந்து பொது வாழ்க்கையில் ஈடுபட உதவியாக இந்த அலவன்ஸ் கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த அடிப்படையில் லிஸ் டிரஸ் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு 1.15 லட்சம் பவுண்ட் அலவன்ஸைப் பெறும் உரிமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னாள் பிரதமர்களான ஜான் மேயர் மற்றும் டோனி பிளேர் கடந்த 2020-21 ஆண்டுக்கு அதிகபட்ச அலவன்ஸை பெற்றுள்ளனர்.

மேலும், கோர்டன் ப்ரவுன் 1,14,712 பவுண்டையும் (ரூ.1,05,63,428), டேவிட் கேமரூன் 1,13,423 பவுண்டையும் (ரூ.1,04,44,729), தெரஸா மே 57,832 பவுண்டையும் (ரூ.53,25,547) அலவன்ஸாக பெற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் வரிசையில் தற்போது ஆறாவதாக லிஸ் டிரஸ்ஸும் சேர்ந்துள்ளார். இவர்களுக்கு பிரிட்டனில் வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து ஆண்டுக்கு 8 லட்சம் பவுண்ட் அல்லது ரூ.7.37 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது. இவ்வாறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்