மாறுபட்ட பிரச்சார உத்திகளால் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த ட்ரம்ப்

By பிடிஐ

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பின் மாறுபட்ட பிரச்சார உத்திகளே அவருக்கு வெற்றி வாய்ப்பை அள்ளி கொடுத்துள்ளது.

அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிய நாள் முதலாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் ஈடுபட்டார். சில நேரங்களில் முஸ்லிம்கள், குடி யேறிகள் குறித்து எதிரான கருத்துக் களைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்கர் தானா என்ற சந்தேகத்தையும் எழுப்பி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்தார். எனினும் இந்தத் தேர்தலில் ஹிலாரியை வீழ்த்தி அவர் வெற்றிப் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபரான ட்ரம்ப், அரசியல் களத்தில் குதித் தது அதைவிட ஆச்சரியமானது. 4 ஆண்டுகளுக்கு முன்புதான் குடியரசு கட்சியின் அதிபர் பிரச்சார களத்துக்குள் ட்ரம்ப் நுழைந்தார். அப்போது முன்னாள் அதிபர் எச்.டபிள்யூ.புஷ்ஷின் இரண்டாவது மகன் ஜெப் புஷ் உட்பட 17 பேர் அதிபருக்கான போட்டியில் களத் தில் இருந்தனர். அந்த சமயம் ட்ரம்பை வேட்பாளராக அறிவிப் பதற்கு சொந்த கட்சியைச் சேர்ந்த வர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி சர்ச்சைக்குரிய தனது பிரச்சார உத்திகள் மூலம் அதிபர் போட்டிக்கான களத்துக் குள் வெற்றிகரமாக நுழைந்தார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், வழக்கத் துக்கு மாறான பிரச்சாரம் மூலம், வழக்கத்துக்கு மாறான அதிபராகி இருக்கிறார் ட்ரம்ப்.

அமெரிக்காவைத் தவிர மும்பை, இஸ்தான்புல் மற்றும் பிலிப்பைன்ஸிலும் ட்ரம்ப் சொத் துக்கள் வாங்கி குவித்துள்ளார். 3 முறை திருமணம் செய்த கொண்ட ட்ரம்புக்கு, டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், இவாங்கா எரிக், டிப்பானி மற்றும் பரோன் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

இந்த அதிபர் தேர்தலில் அமெரிக் காவை மீண்டும் வல்லமை பெற்ற நாடாக மாற்றுவேன், அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்து வேன், குடியேறிகளைத் தடுத்து நிறுத்த மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன், முஸ்லிம் களுக்குத் தடை விதிப்பேன் உள் ளிட்ட சர்ச்சைக்குரிய வாக்குறுதி களையும் ட்ரம்ப் வழங்கியி ருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்