ஆசிய விவகாரங்களில் தலையிடாதீர்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

By பிடிஐ

தென் சீனக் கடலில் தங்களுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையில் அமெரிக்க தலையிட வேண்டாம் என சீனா எச்சரித்து உள்ளது.

தென் சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும் பிலிப்பைனஸ், மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது.

இதனால் தென் சீனக் கடலை சுற்றி மணற் கற்களைக் கொண்டு செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க போன்ற நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் சஹாங் வான்குவான் அமெரிக்காவின் செயல்பாடு குறித்து கூறும்போது, "தெற்காசிய விவகாரங்களில் அமெரிக்க தொடர்ந்து தலையிட்டு வருவதை சீனா எச்சரிக்கிறது. அமெரிக்கா தனது அதிகாரத்தை தெற்காசியப் பகுதிகளில் செலுத்த முயற்சி செய்து வருகிறது.

மேலும், அமெரிக்கா ராணுவ பலத்தைக் கொண்டு பிற நாடுகளுடன் ராணுவ உடன்படிக்கைகளையும், பொருளாதார உடன்படிக்கைகளையும் வலுப்படுத்தி வருவதை சீனா கவனித்து வருகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்