‘தீவிரவாதத்தின் தாயகம் பாகிஸ்தான்’: மோடி கருத்துக்கு சீனா எதிர்ப்பு

By பிடிஐ

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் தாய்நாடு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கோவா மாநிலத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் தீவிரவாதத்தின் தாயகமாக விளங்குகிறது என குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியதாவது:

எந்தவொரு இனத்துடனும், மதத்துடனும் தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தி பேசுவதை நாங்கள் வலுவாக எதிர்க்கிறோம். இதுதான் எங்களது நீண்டகால நிலைப்பாடு. சீனாவும், பாகிஸ்தானும் அனைத்து விதமான சந்தர்ப்பங்களிலும் நட்பு நாடாகவே திகழ்ந்து வருகின்றன. இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு தான்.

இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவுக்கு மிக நெருங்கிய அண்டை நாடுகள். இவ்விரு நாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம். அப்போது தான் இந்தியா, பாகிஸ்தான் உறவு வளரும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

மேலும்