பபுவா நியுகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

By ஏஎஃப்பி

பபுவா நியுகினியாவின் நியு பிரிட்டன் தீவுகளை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அதிகம் வசிக்காத பகுதி என்பதால் உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று யு.எஸ்.ஜி.எஸ் தெரிவிக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.9 என்று பதிவான இந்த நிலநடுக்கம் நியு பிரிட்டன் தீவுகளுக்கும் பபுவா நியு கினியாவின் வடகிழக்குக்கும் இடையில் கடலில் 22 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

1998-ம் ஆண்டு ஜூலை மாதம் பபுவா நியுகினியாவின் வடக்குக் கடல் பகுதியான அய்டேப் என்ற ஊருக்கு அருகே கடலுக்கு அடியில் 7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியபோது ஏற்பட்ட 2 சுனாமி பேரலைகளுக்கு சுமார் 2,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

பிஸ்மார்க் தீவுக்கூட்டங்களில் நியு பிரிட்டன் ஒரு பெரிய தீவுப்பகுதியாகும். இது 4,000கிமீ பரப்பளவு கொண்ட பசிபிக்-ஆஸ்திரேலியா கண்டத்தட்டின் மேல் உள்ளது. இப்பகுதி பசிபிக் ரிங் ஆஃப் பயர் என்று அழைக்கப்படும் பிளேட்டுகள் அடிக்கடி மோதிக்கொள்ளும் பயங்கர நிலநடுக்கப் பகுதியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்