தேர்தலை ரத்து செய்துவிட்டு நான் வெற்றி பெற்றதாக அறிவிப்பீர்: டிரம்ப் அதிரடி

By ஐஏஎன்எஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலை ரத்து செய்துவிட்டு தான் வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஒஹியோ மாகாணத்தில் நடந்த ஒரு பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், "இத்தருணத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தேர்தலை ரத்து செய்துவிட்டு நான் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பதே சிறந்தது. ஏனெனில் ஹிலாரியின் கொள்கைகள் மிக மோசமாக இருக்கின்றன. தேர்தலை நடைமுறைகள் சீர்கெட்டுவிட்டன. ஊடகங்கள் எனது பிரச்சாரங்களை திட்டமிட்டே தோற்கடிக்கச் செய்தன.

ஹிலாரிக்கு அமெரிக்க அதிபர் தேர்தலை ஏற்றுக்கொள்ளும் திறன் இல்லை. எனவே, தேர்தலை ரத்து செய்துவிட்டு நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்" என்றார்.

கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், ட்ரம்ப் சமீப காலமாகவே அதிபர் தேர்தலை ஏன் நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பிவருகிறார்.

இந்நிலையில், அவருடைய இந்தக் கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

ஓடிடி களம்

31 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்