தீவிரவாத அமைப்புகள் மீது பாக். நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தும்: அஜித் தோவலிடம் ரைஸ் தகவல்

By பிடிஐ

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் வலியுறுத்துவோம் என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் பேசினார்.

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

அஜித் தோவலிடம் நேற்று முன் தினம் பேசிய ரைஸ், ‘கடந்த 18-ம் தேதி உரியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது நடத் தப்பட்ட எல்லை தாண்டிய தாக்கு தலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறோம்’ என தெரிவித்தார். மேலும், “லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையால் தீவிரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து வோம். அந்த அமைப்புகளை சட்டப் பூர்வமற்றவையாக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப் பம்” என்பதையும் சூசன் ரைஸ் தெரிவித்தார்.

உலகில் தீவிரவாதத்தை ஊக்கு விப்பவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இருமடங்கு உறுதிப்பாட்டுடன் உள்ளார் என ரைஸ் தெரிவித்தார்.

மேலும், அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதையும், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் அமெரிக்காவுக்கு உள்ள கடமையையும் ரைஸ் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

சினிமா

3 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்