அமெரிக்க விமான தாக்குதலை தடுக்க சீனாவிடம் உதவி கோருகிறது பாகிஸ்தான்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நடத்தும் ஆளில்லா விமான தாக்குதலை தடுத்து நிறுத்த உதவுமாறு சீனா விடம் பாகிஸ்தான் உதவி கோரி யுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதி களில் தலிபான், அல்-காய்தா தீவிர வாதிகள் பதுங்கி வாழ்கின்றனர். அவர்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் அவ்வப் போது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திவருகிறது.

பாகிஸ்தானின் குவெட்டா நகர் அருகே அண்மையில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார்.

இது குறித்து அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறிய போது, பாகிஸ்தானின் இறை யாண்மையில் அமெரிக்கா தலை யிடக்கூடாது என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் பாகிஸ்தானிடம் முறைப்படி தகவல் தெரிவித்த பிறகே தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் அமெரிக்க தாக்குதலை தடுத்து நிறுத்த சீனாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது. இதுதொடர் பாக பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து ஐ.நா. சபையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளன.

ஏற்கெனவே கடந்த ஏப்ரலில் ஐ.நா. சபையில் சீனா தாக்கல் செய்த அறிக்கையில் அமெரிக்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு களை சுமத்தியது. அதில் கூறியிருப் பதாவது: உலகம் முழுவதும் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வாதிட்டு வருகிறது. ஆனால் அந்த நாடு சிரியா, இராக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்க ளை கொன்று குவித்து வரு கிறது. இதேபோல பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் ஆளில்லா விமான தாக்குதலில் அப்பாவிகள் கொல் லப்பட்டு வருகின்றனர். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை வட்டாரங்கள் கூறியபோது, ராஜ்ஜியரீதியில் அமெரிக்காவை பாகிஸ்தானால் எதிர்க்க முடியாது. அதனால்தான் சீனாவின் உதவியைக் கோரியுள்ளோம். மேலும் சில நட்பு நாடுகளிடமும் பிரதமர் நவாஸ் ஷெரீப் உதவி கோரியுள்ளார் என்று தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

39 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்