பெருவெள்ளத்தால் இந்தியாவுக்கு ஆபத்து: சர்வதேச ஆய்வறிக்கையில் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்று சர்வதேச ஆய்வறிக்கை யில் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரண மாக உலகின் சில பகுதிகளில் கடும் வறட்சியும் வேறு சில பகுதிகளில் வரலாறு காணாத மழையும் பெய்து வருகின் றன.

இந்த பிரச்சினை தொடர்பாக லண்டனை சேர்ந்த கிறிஸ்டியன் எய்டு என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில் பெருவெள்ள ஆபத்து நிறைந்த 10 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் சீனா முதலிடத்திலும் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. வங்கதேசம், இந்தோனேசியா, வியட்நாம், எகிப்து, நைஜீரியா, அமெரிக் கா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நாடுகளில் வரும் 2060-ம் ஆண்டுக்குள் 100 கோடி பேர் வரை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல உலகில் பெரு வெள்ள அபாயம் நிறைந்த 10 நகரங்களின் பட்டியலும் வெளி யிடப்பட்டுள்ளது. அதில் மியாமி (அமெரிக்கா), குவான்ஜியு (சீனா), நியூயார்க் (அமெரிக்கா) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியாவின் கொல் கத்தா 4-வது இடத்திலும் மும்பை 6-வது இடத்திலும் உள்ளன.

எனவே பருவநிலை மாற்றத் தால் ஏற்படும் பேராபத்தை உணர்ந்து உலக நாடுகள் முன்னெச் சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று கிறிஸ்டியன் எய்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

க்ரைம்

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

18 mins ago

தொழில்நுட்பம்

16 secs ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்