ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் சிரியாவில் 120 பேர் பலி: 200 பேர் படுகாயம்

By பிடிஐ

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று நடத்திய கார் குண்டு, தற்கொலைப் படை தாக்குதல்க ளில் 120 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல்- ஆசாத் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிக ளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

ரஷ்ய ராணுவத்தின் உதவியால் அண்மைக்காலமாக அதிபர் ஆசாத் படைகளின் கை ஓங்கி வருகிறது. இதற்குப் பதிலடியாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள லடாகியா பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று தொடர் தாக் குதல்களை நடத்தினர்.

லடாகியா மாகாணம் ஜெப்லா, டார்டோஸ் கடற்கரை நகரங்களில் உள்ள பஸ் நிலையங்கள், மருத்து வமனைகள், முக்கிய சந்தைகளில் கார்களில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. சில இடங்களில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் வெடித்துச் சிதறினர்.

இந்தத் தாக்குதல்களில் ஒட்டு மொத்தமாக 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க் கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இத்தாக்குதல்களுக்கு பொறுப் பேற்றுள்ளது.

அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக சிரியாவின் லடாகியா நகரில் ரஷ்ய கடற்படை, விமானப்படை முகா மிட்டுள்ளது. அந்த கடற்படைத் தளங்களை ஒட்டிய நகரங்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

ஏமனில் 45 பேர் பலி

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹைதியின் படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சி்ப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏடன் நகரில் நேற்று ராணு வத்துக்கு ஆட்சேர்க்கும் முகாம் நடைபெற்று கொண்டி ருந்தது.

அந்த முகாமுக்கு காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி அங்கு வரிசையில் காத்திருந்த இளைஞர்கள் மீது மோதி வெடித் துச் சிதறினான். இதில் 45 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்