சீன விமான விபத்து | பைலட்டுக்கு உடல் நலமின்மையா, தற்கொலையா? - தொடரும் யூகங்கள்

By செய்திப்பிரிவு

பீஜிங்: சீனாவின் வனப் பகுதியில் விபத்துக்குள்ளான போயிங் ரக பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் கண்பிடித்துள்ள சூழலில், விமான விபத்து எவ்வாறு நடத்திருக்கும் குறித்த யூகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த 21-ம் தேதி மதியம் புறப்பட்ட நிலையில், குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

விமானத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புப் படையினரும், மீட்புக் குழுவினரும் போராடி தீயை அணைத்தனர். அங்கு கிடந்த இடிபாடுகளுக்குள் விமான பாகங்களை கண்டறியும் பணியில், 3 நாட்களுக்குப் பிறகு விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

விமான விபத்தும் - யூகங்களும்: போயிங் விமான விபத்திற்கு மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு , தீவிரவாத தாக்குதல், பைலட்டின் உடல் நலமின்மை, தற்கொலை இவற்றில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இதுவரை விபத்து இந்தக் காரணத்தினால்தான் நடந்தது என்று அதிகாரிகள் கூறவில்லை. கருப்புப் பெட்டியை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து வருகிறது.

விபத்துக்குள்ளான போயிங் விமானத்தை செலுத்திய முதன்மை பைலட் 6,709 மணி நேரங்கள் விமானத்தை ஓட்டிய அனுபவம் உடையவர். முதல் துணை விமானிக்கு 31,769 மணிநேரம் பயணம் அனுபவம் உள்ளது. இரண்டாவது துணை விமானிக்கு 556 மணிநேரம் பறந்த அனுபவம் உள்ளது. பைலட்கள் அனைவரும் இளைஞர்கள் அவர்கள் விமானத்தை செலுத்துவதற்கான அனைத்து திறனையும் பெற்றிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், விமான விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

59 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்