நியூயார்க்கில் டொனால்டு டிரம்ப், ஹிலாரி வெற்றி

By பிடிஐ

அமெரிக்காவின் அடுத்த அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக நியூயார்க் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இதன் மூலம் இருவரும் இடையில் ஏற்பட்ட சிறிய சரிவி லிருந்து மீண்டுள்ளனர். மிகவும் முக்கியமாகக் கருதப்படும் நியூ யார்க் மாகாண தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், இவர்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்யப் படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடை பெறுகிறது.

இதையொட்டி அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. மாகாண வாரியாக நடைபெறும் இத்தேர்தலில் ஜன நாயக கட்சியில் ஹிலாரி - பெர்னி சாண்டர்ஸ் இடையி லும் குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப் - டெட் குருஸ் இடையிலும் போட்டி நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

18 mins ago

க்ரைம்

12 mins ago

தமிழகம்

3 mins ago

சினிமா

27 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்