புளூ, கரோனா வைரஸ் கலவையான புளூரோனா காய்ச்சல் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

டெல்அவிவ்: இஸ்ரேல் நாட்டில் புளூ, கரோனா வைரஸ் கலவையான புளூரோனா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019 இறுதியில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது. தற்போது கரோனா வைரஸ் மரபணு மாறி புதிய வைரஸ்கள் உருவாகி வருகின்றன.

இந்த வரிசையில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸின் டெல்டாவும் ஒமைக்ரானும் கலந்து டெல்மைக்ரான் என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பதாக விஞ்ஞானிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில் இஸ்ரேலின் பேட்டா டேக்வா நகரில் உள்ளமருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் அண்மையில் கரோனாஅறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவரது சளி மாதிரியை பரிசோதித்தபோது, ஒரே நேரத்தில் புளூ காய்ச்சல், கரோனாகாய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப் பது தெரியவந்தது. புதிய வகை காய்ச்சலுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் புளூரோனா என்று பெயரிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் கர்ப்பிணிகளிடையே புளூ காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருகிறது. அவர்களில் பலர் புளூரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே புளூ, கரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலில் பெரும்பாலானோருக்கு 3-ம் தவணை கரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்தநாட்டில் 5-வது கரோனா அலைஏற்பட்டிருப்பதால் 4-ம் தவணைதடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டப்படுகிறது.

இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறும்போது, "புளூரோனாகாய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு மூச்சுத் திணறல், உடல் உறுப்புகள் செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வழக்கமான கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

மேலும்