88 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவில் அமெரிக்க அதிபர் பயணம்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 3 நாட்கள் அரசுமுறை பயணமாக கியூபா தலைநகர் ஹவானாவுக்கு நேற்றுமுன்தினம் சென்றார். 88 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபாவுக்கு சென்றுள்ளார்.

கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த பிடல் காஸ்ட் ரோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக பகை நீடித்தது. வயது முதுமை காரணமாக கடந்த 2008-ம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோ அதிபர் பதவியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008 பிப்ரவரி 24-ம் தேதி அதிபர் பொறுப்பை ஏற்றார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நீக்கினார்.

இந்நிலையில் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக அதிபர் பராக் ஒபாமா நேற்றுமுன்தினம் கியூபா சென்றார். தலைநகர் ஹவானாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒபாமாவின் மனைவி மிஷேல், மகள்கள் மலியா, சாஷா ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

88 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபாவுக்கு சென்றுள்ளார். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த பனிப்போர் கால பகை முடிவுக்கு வந்துள்ளது.

வரலாற்று பயணம்

ஹவானாவில் தரையிறங்கி யதும் அங்குள்ள அமெரிக்க தூதரகத்துக்கு ஒபாமா சென்றார். அங்கு அவர் பேசியபோது, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணம் என்று தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசுகிறார். அப்போது இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்று தெரிகிறது.

எனினும் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசமாட்டார் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் ஹவானாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

டொனால்டு டிரம்ப் கண்டனம்

அதிபர் ஒபாமா ஹவானாவில் தரையிறங்கியபோது அதிபர் ரவுல் காஸ்ட்ரோ விமான நிலையத்துக்கு வரவில்லை. இதுகுறித்து குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களில் முன்னிலை வகிக்கும் டொனால்டு டிரம்ப் கூறியபோது, அண்மையில் போப் கியூபா சென்றபோது ரவுல் காஸ்ட்ரோ நேரில் சென்று வரவேற்றார், ஆனால் ஒபாமாவை அவர் இழிவுபடுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

14 mins ago

கல்வி

28 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

56 mins ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்