மியான்மர் புதிய அதிபராக டின் யாவ் தேர்வு

By செய்திப்பிரிவு

மியான்மர் நாட்டின் புதிய அதிபராக டின் யாவ் (69) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி போராடினார். அவரது போராட்டம், உலக நாடுகளின் நிர்பந்தம் காரண மாக கடந்த நவம்பரில் நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதில் சூச்சியின் ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால் சூச்சியின் 2 மகன்களும் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருப்ப தால் அவர் அதிபராக முடியாது. எனவே அதிபர் பதவிக்கு தனது உதவியாளர் டின் யாவின் பெயரை சூச்சி அறிவித்தார். ராணுவத்தின் தரப்பில் முன்னாள் தளபதி யு மியான்ட் ஸ்வே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவர்களில் யாரை அதிபராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து மியான்மர் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில் சூச்சியின் உதவி யாளர் டின் யாவுக்கு பெரும் பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் அவர் அந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்