பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி ‘டீன்’ ராஜினாமா

By பிடிஐ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெர்க்லி நகரில் புகழ்பெற்ற பெர்க்லி சட்டக் கல்லூரி உள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இக்கல்லூரியின் டீன் ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஜித் சவுத்ரி (45) பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சவுத்ரி தன்னை பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக அவரது பெண் உதவியாளர், அலமேடா கவுன்ட்டி நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சவுத்ரி காலவரம்பற்ற விடுப்பில் செல்வதாக அறிவித்தார். இந்நிலையில் சுஜித் சவுத்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அவரது ராஜினாமா வியாழக்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் பெர்க்லி சட்டக்கல்லூரி அறிவித்துள்ளது.

முன்னதாக, பெண் உதவியாள ரின் குற்றச்சாட்டை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், உதவியாளரின் கைகள், தோளில் தொடுவது, கன்னத்தில் முத்தமிட்டது போன்ற செயல்களை சவுத்ரி ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் இதற்கு பாலியல் நோக்க மில்லை, நன்றி பாராட்டும் வகையில் செய்தேன் என அவர் தனது செயலை நியாயப்படுத்தியதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

47 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

49 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்