அதிகரிக்கும் கரோனா: ஊழியர்களுக்கு ஒருவாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை: ரஷ்யா அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ரஷ்யா இறங்கி வருகிறது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36, 339 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் பலியாகி உள்ளனர்.

நாள்தோறும் கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு ரஷ்யாவில் அதிகரித்து வண்ணம் உள்ளது. எனவே கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, “ ரஷ்யா முழுவதற்கும் ஊழியர்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.” என்று புதின் அறிவித்திருக்கிறார். ரஷ்யாவில் 81 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. இந்த நிலையில் ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் விரைவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்