ஆஸி.யில் இந்தியருக்கு 14 மாதம் சிறை

By பிடிஐ

கருப்புப் பணம் வைத்திருந்தது தொடர்பாக இந்திய வம்சாவளி டாக்ஸி டிரைவருக்கு ஆஸ்திரேலியாவில் 14 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஹர்மீத் சிங் (37) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது காரில் சூட்கேஸ் மூலம் 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் ரூ.2.5 கோடி) கொண்டு சென்றார்.

அந்தப் பணத்துக்கு அவர் முறையாக கணக்கு காட்டவில்லை. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின் போது, “நான் தவறு ஏதும் செய்ய வில்லை. மிகக் குறைந்த தண்டனை அளிக்க வேண்டும். நான் எவ்வளவு தொகை எடுத்துச் சென்றேன் என எனக்குத் தெரியாது” என ஹர்மீத் சிங் வாதிட் டார். ஆனால், நீதிமன்றம் அதை நிராகரித்து, 14 மாதம் சிறை தண்டனை விதித்தது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையில் ஹர்மீந்தர் சிங்கும் ஓர் அங்கம் என நீதிபதி தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து ஒருவரின் உத்தரவைப் பெற்று அதன்படி ஹர்மீத் செயல்பட்டுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

58 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்