அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு கரோனா தொற்று இல்லை. ரத்தத்தில் ஏற்பட்டுள்ள வேறு தொற்றின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள இர்வைன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கிளின்டனின் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் உரேனா, கிளின்டன் தேறி வருகிறார். அவர் உற்சாகமாகவே இருக்கிறார். மருத்துவர்களுக்கு நன்றி. கூடவே அவரை கவனித்துக் கொண்ட செவிலியருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

கிளின்டனுக்கு குளுகோஸ் மூலம் ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்.

பில் கிளின்டன் அமெரிக்காவின் 42வது அதிபராக 1993 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருந்தார். அவர் தனது 58வது வயதில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

54 secs ago

ஜோதிடம்

15 mins ago

ஜோதிடம்

28 mins ago

வாழ்வியல்

33 mins ago

ஜோதிடம்

59 mins ago

க்ரைம்

49 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்