ஆப்கானில் மீண்டும் பாஸ்போர்ட் வழங்கல்

By செய்திப்பிரிவு

ஒரு மாதத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீண்டும் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதால் ஆப்கானிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு விசா வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுமார் 5,000 - 6,000 வரையிலான பாஸ்போர்ட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப் போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

மேலும்