இந்திய விமானங்களுக்கு தடை நீக்கம்; நாளை முதல் பயணிகள் வருவதற்கு கனடா அரசு அனுமதி

By ஏஎன்ஐ

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் இயக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடையை நாளை முதல் நீக்கி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா 2-வது அலையை உருவானதும் ஏப்ரல் மாதத்திலிருந்து பயணிகள் விமான சேவையை கனடா அரசு தடை செய்தது. இந்தத் தடையை பலமுறை நீட்டித்து, இந்தியாவில் கரோனா சூழலைக் கண்காணித்து வந்தது.

சமீபத்தில் கடந்த செவ்வாய்கிழமை கனடா அரசு பிறப்பித்த திடீர் உத்தரவில், அனைத்து விதமான வர்த்தக பயணிகள் விமானங்களுக்கும், தனியார் பயணிகள் விமானங்களுக்கும் 26 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்து. இந்நிலையில் அந்தத்தடை நாளை முதல் விலக்கப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

நாளை முதல் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானங்கள் தடையின்றி இயக்கப்படும், இந்தியாவிலிருந்து பயணிகள் வருவதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. அதேசமயம் கரோனா தடுப்பூசி, கரோனா தடுப்பு வழிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில் “ இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம், பயணிகள் 27ம் தேதி முதல் கனடாவுக்கு வரலாம். பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், பயணத்துக்கு 18 மணிநேரத்துக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் மையத்தில் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா சார்பில் வரும் 30-ம் தேதி முதல் கனடாவுக்கு விமான சேவை தொடங்குகிறது.

கனடாவுக்கான இந்தியத் தூதர் அஜெய் பசாரியா ட்வி்ட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இருநாடுகளுக்கும் இடையே விமானப் பயண இயல்பான சூழல் உருவாக முழுமையான முயற்சியை வரவேற்கிறேன். ஏர் இந்தியா, ஏர் கனடா விமானங்கள் 27ம் தேதி முதல் டெல்லி-டொரான்டோ, வான்கூவர் நகரங்களுக்கு இடையே விமானச் சேவையைத் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்