அமெரிக்காவின் நன்றியற்றதன்மைக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது: ஐ.நா.வில் இம்ரான் கான் பேச்சு: பாஜக அரசு மீதும் சாடல்

By செய்திப்பிரிவு


அமெரிக்காவின் நன்றியற்ற தன்மைக்கும், சர்வதேச இரட்டை நிலைப்பாட்டுக்கும் பாகிஸ்தான் பலியாகிவிட்டது என்று ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரடியாகக் கலந்து கொள்ளவி்ல்லை அவரின் பதிவுசெய்யப்பட்ட பேச்சு மட்டும் ஒலிபரப்பப்பட்டது. பருவநிலை மாறுபாடு, சர்வதேசஅளவில் இஸ்லாம் குறித்தஅச்சம், உள்ளிட்ட பல்ேவறு விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை இந்து தேசிய அரசு என்றும், பாசிஸ அரசு என்றும் இம்ரான்கான் கடுமையாக சொற்களால் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தானையும் அமெரிக்கா பயன்படுத்துக்கொண்டு கைகழுவிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

இம்ரான் கான் ஐ.நா.வில் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானில் உள்ள தற்போதைய சூழலுக்கு, சில காரணங்களால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் பாகிஸ்தான் மீது பழிசுமத்துகிறார்கள்.

இந்த ஐ.நா. பொதுமன்றத்திலிருந்து அனைவரும் தெரி்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன், ஆப்கானிஸ்தானைத் தவிர்த்து அதிகமாக பாதி்க்கப்பட்டது பாகிஸ்தான்தான். இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப்பின், அமெரிக்கா தொடர்்ந்த போரில் பாகிஸ்தானும் சேர்ந்தபோதே அந்த பாதிப்பு தொடங்கிவிட்டது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக முஜாகிதீன்களுக்கு பயிற்சி அளித்ததும் அமெரிக்காதான். அவர்களை ஹூரோவாகக்கியதும் அமெரி்க்காதான்.

தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரி்க்காவுடன் நாங்கள் சேர்ததற்கு நாங்கள் கொடுத்த விலை 80 ஆயிரம் பாகிஸ்தான்மக்களின் உயிர். உள்நாட்டுக் குழப்பம், எதிர்ப்பு, ஆளில்லா விமானத்தாக்குதல்தான்.
இந்தப் போரின் இறுதியில் அமெரிக்காவுக்கு உதவிய எங்களுக்கு எந்தவிதமான ஊக்கப்படுத்தும் வார்த்தையும் கிடைக்கவில்லை, மாறாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுதான் இருந்தது.

அமெரிக்காவின் நன்றியற்ற தன்மைக்கும், சர்வதேச இரட்டை நிலைப்பாட்டுக்கும் பாகிஸ்தான் பலியாகிவிட்டதுஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் வலுப்பெற்றதற்கு பாகிஸ்தான்தான் காரணம், அவர்களுடன் பாகிஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்தது என்று குற்றம்சாட்டினார்கள்.

தலிபான்கள் ஆட்சியை சர்வதேச சமூகம் ஒதுக்கிவைப்பதற்கு பதிலாக மக்களைப் பாதுகாக்க வலிமைப்படுத்த வேண்டும் என்ற எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி வார்த்தைகளை இங்கு கூறுகிறேன். தலிபான்கள் ஆட்சியில் நிச்சயம் மனித உரிைமகள் காக்கப்படும், முழுமையான அரசு ஏற்பட்டு, தீவிரவாதிகள் ஆப்கன் மண்ணை பயன்படுத்தமுடியாத வகையில் தடுக்கப்படும்.

சமமான தன்மை இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மனித உரிமை மீறல்களை உலகம் அணுகுவது துரதிருஷ்டவசமானது, மிகவும் துரதிருஷ்டவசமானது.

புவிசார் அரசியல் பரிசீலனைகள், அல்லது பெருநிறுவன நலன்கள், வணிக நலன்களால் வளர்ந்த நாடுகளை தங்கள் தொடர்புடைய நாடுகளின் மீறல்களைக் கவனிக்கவே அடிக்கடி கட்டாயப்படுத்துகின்றன.

இந்தியாவில் உள்ள இந்துத்துவா சிந்தனை கொம்ட அரசு பாசிஸ சிந்தனையுடன், 20 கோடி முஸ்லிம் மக்கள் சமூகத்துக்கு எதிராக வன்முறையையும், அச்சத்தையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. குறிப்பாக தாக்குதல், கொலைகள், பாகுபாடு கொண்ட குடியுரிமைச்சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு எட்ட இந்திய அரசு அழைக்கி்றது. ஆனால், காஷ்மீரில் இந்தியப் படைகள் ஒட்டுமொத்தமாக, திட்டமிட்டு மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள்.

காஷ்மீரின் சிறந்த தலைவர் சையது அலி கிலானி உயிரிழந்தபின் அவரின் சடலத்தை வலுக்கட்டாயமாக இந்தியப் படைகள் பிடுங்கிச் சென்று, அடக்கம் செய்தனர். இஸ்லாமிய முறைப்படி முழுைமயாக அடக்கம் செய்யவி்ல்லை என கிலானி குடும்பத்தார் குற்றம்சாட்டுகிறார்கள். கிலானி உடலை இஸ்லாமிய முறைப்படி முழு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்

இவ்வாறு இம்ரான்கான் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்