தீவிரவாதத்தை ஒழிக்கவே பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி: ஒபாமா நிர்வாகம் விளக்கம்

By பிடிஐ

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை விற்கக் கூடாது என அமெரிக்க எம்.பிக்கள் போர்கொடி உயர்த்தியுள்ள நிலையில், தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதை தடுக் கவே பாகிஸ்தானுக்கு உதவிக் கரம் நீட்ட முன்வந்திருப்பதாக ஒபாமா நிர்வாம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் நேற்று முன் தினம் நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தின் போது வெளியுறவுத் துறை இணை செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:

பாகிஸ்தான் தனது மண்ணில் வேரூன்றியுள்ள தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்கா அளிக் கும் இந்த உதவி நிச்சயம் கைகொடுக்கும். பாகிஸ்தானை தங்களது பாதுகாப்பான புகலிட மாக தீவிரவாதிகள் மாற்றி வருவதை தடுப்பதற்கும் இதன் மூலம் வழி ஏற்படும். இந்த உதவியை பாகிஸ்தானின் நலனுக் காக மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியத்தின் நலனுக்காகவே செய்கிறோம். செனட் சபை உறுப்பினர் பாப் கார்க்கர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் பாகிஸ்தானுக்கு எக்காரணம் கொண்டு ‘எஃப்-16’ ரக போர் விமானங்களை விற்கக் கூடாது. ஹக்கானி போன்ற தீவிரவாத அமைப்புகள் மக்களின் உதவி யுடன் பாகிஸ்தானை தங்களது பாதுகாப்பான புகலிடமாக மாற்றி வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. எனவே பாகிஸ்தானுக்கு எந்த வகையிலும் அமெரிக்கா ராணுவ உதவிகள் வழங்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பாதிக்கப்பட்டதை போன்று ஆசிய பிராந்தியத்தில் வேறு எந்த நாடும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. பாகிஸ் தானில் தீவிரவாதத்தை ஒழிப்பதற் காக ஆதரவு அளிப்பது அமெரிக் காவுக்கு தான் அதிக நன்மை அளிக்கும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்